மும்பை, ஏப்.18- இந்திய கப்பற்படை வீரர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது ராணுவ உயர திகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மும்பை கொலாபவில் உள்ள ஐ.என்.எஸ்.எச்.அஸ்வினியில் (கடற்படை மருத்துமனையில்) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு மாலுமியுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளது.
கடற்படை வீரர்களைப் பாதுகாக்க அனைத்து தளங்களிலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள் ளது.
கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், கடந்தவாரம் வெளியிட்ட வீடியோ பதிவில், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற வற்றை வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாக்க வேண்டியது முக்கியம். அதில் பணியாற்றுபவர்களும் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டு மென வீரர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். இதனிடையே, ராணுவத் தலைமை தளபதி, எம்.எம்.நரவனே கூறு கையில், ராணுவத்தில் ஏற்கனவே எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் இரண்டு பேர் ராணுவ மருத்துவர்கள், ஒரு வர் செவிலியர் உதவியாளர். இவர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.