ஜெய்ப்பூர்
நாட்டின் மேற்கு எல்லைப் பகுதி மாநிலமான ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தொடக்கத்தில் ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூரில் மட்டுமே வைரஸ் பரவல் அதிகமாக இருந்த நிலையில், தற்போது புறநகரிலும் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் கடந்த 12 மணிநேரத்தில் 38 பேருக்குத் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அங்கு கொரோனா பாதிப்பு 1,169 ஆக உயர்ந்துள்ளது.
ஜோத்பூரில் உள்ள எம்.டி.எம் மருத்துவமனையில் இதய நோய்க்காக அனுமதிக்கப்பட்டிருந்த 56 முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.