tamilnadu

img

திருட்டுப் பட்டம் கட்டி தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்... ஆசனவாயில் ஸ்க்ரூ டிரைவரை நுழைத்து சித்ரவதை

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் சகோதரர்கள் இருவர் மீது, திருட்டுப் பட்டம் கட்டி, அடித்து உதைத்து அவர்களின் ஆசன வாயில்ஸ்க்ரூ டிரைவர் கம்பியை நுழைத்து, சித்ரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனை வீடியோவாக எடுத்து சமூகவலை தளங்களிலும் பரவ விட்டுள்ளனர்.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 230 கி.மீ. தொலைவிலுள்ள நாகவூர் மாவட்டம் கர்னவ் நகரில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்குள்ள இருசக்கர வாகன சேவை மையத்துக்கு, தலித் சகோதரர்கள், தங்களின் வாகனத்தை சர்வீஸூக்கு விடுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து 500 ரூபாயை, அவர்கள் திருடிவிட்டதாக குற்றம் சாட்டி, பீம்சிங், ஐடன் சிங், ஜசுசிங் மற்றும் சவாய்சிங் உள்ளிட்ட 7 பேர் சரமாரியாகத் தாக்கி வயிற்றில் பலமுறை உதைத்துள்ளனர். மேலும், சகோதரர்கள் இருவரின் ஆடைகளைக் கழற்றி, கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு, கொடூரமாக தாக்கியதுடன், ஸ்க்ரூ டிரைவரை, பெட்ரோலில் நனைத்து அவர்களது ஆசனவாயில் நுழைத்து, குற்றத்தை ஒப்புக்கொள்ளும் படியும் சித்ரவதை செய்துள்ளனர். அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நடந்த இச்சம்பவம், தாமதமாகத்தான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலித் இளைஞர்கள் தாக்கப் பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குற்றவாளிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.