ஸ்ரீஹரிகோட்டா, டிச.8- சந்திரயான்-3 திட்டத்திற்கு மேலும் ரூ.75 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வ தற்காக அனுப்பிய சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவில் தரை யிறங்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.75 கோடி வழங்க மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு 2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இஸ்ரோ வுக்கு ரூ.666 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதில் 8.6 கோடி ரூபாய் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள் ளது. மேலும் 12 கோடி ரூபாய் சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்பும் ஏவுகணைத் தயாரிக்கவும், 120 கோடி ரூபாய் ஏவுதளங்கள் மேம்பாட்டுக்காக வும் இஸ்ரோ ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தில் 60 கோடி ரூபாய் இயந்தி ரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காகவும் வருவாய் செல வினங்களுக்காக 15 கோடி ரூபாய் என 75 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இஸ்ரோ கோரிக்கை விடுத்துள்ளது.