இஸ்லாமாபாத்
இந்தியாவை போலவே பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி பயணித்து வரும் நிலையில், இதுவரை அங்கு 2.31 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 762 பேர் பலியாகியுள்ள நிலையில், 1.31 லட்சம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு ஆலோசகரான ஜாபர் மிர்சாவுக்கு கொரோனா தொற்று தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறினார். தற்போது ஜாபர் வீட்டில் சிகிச்சையில் பெற்று வருகிறார்.