tamilnadu

img

தங்கம் விலை ரூ. 192 உயர்வு

சென்னை, அக். 25- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளியன்று(அக்.25) சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 29 ஆயிரத்து 496 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளியன்று(அக்.25) வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் விலை சற்று உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,496 என்ற அளவில் விற்பனையானது. கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.3687-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 24 கேரட் தங்கம் ஒரு சவரன் 30  ஆயிரத்து 816 ரூபாய்க்கும், ஒரு கிராம் 3852 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்தது.