tamilnadu

img

இந்திய பங்குசந்தைகளின் வர்த்தகம் 2 சதவீதம் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தின், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் ஆகியவை 2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 

இன்றைய இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 737 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. இதனை தொடர்ந்து தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 226 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையின் சரிவு மற்றும் இந்திய தொழில் துறைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸானது 361 புள்ளிகள் சரிந்து 38,305 புள்ளிகளாக முடிவடைந்தது. நிஃப்டி புள்ளி 114 வரை சரிந்து 11,359 புள்ளிகளாக முடிவடைந்தது.