புதுதில்லி:
இந்தியாவில் புதிதாக 78 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்படவிருக்கும் நிலையில், இதனால் பொருளாதார இழப்புதான் ஏற்படும் என்று ‘கிரிசில்’ ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் சென்ற ஆண்டின் நவம்பர் மாதத்தில், நாடு முழுவதும் புதிதாக 78 ஆயிரத்து 493 பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்போவதாக அறி வித்திருந்தன.
இதுதவிர, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபி நிறுவனம் இணைந்தும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 6 ஆயிரம் புதிய பெட்ரோல் நிலையங்களைத் திறப்பதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டன. ராயல் டச் ஷெல் நிறுவனமும் 200 பெட்ரோல் நிலையங்களைத் திறக்க முடிவுசெய்துள்ளது.ஏற்கெனவே, 64 ஆயிரத்து 624 பெட்ரோல் நிலையங்கள் இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக 78 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்பட்டால் பொருளாதார ரீதியில் இழப்பு ஏற்படும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.புதிதாக 30 ஆயிரம் பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்பட்டாலே அடுத்த 12 ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும் என கிரிசில் நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் 1994-ஆம் ஆண்டில் மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 800 பெட்ரோல் நிலையங்கள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 50 ஆயிரமாகக் குறைக்கப்பட்டு உள்ளதை
யும் கிரிசில் சுட்டிக்காட்டி யுள்ளது.