உலகின் மிகப்பெரிய குடியரசுத்தலைவர் தேர்தலான இந்தோனேசியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
உலகின் மிக சிக்காலான வாக்குப்பதிவு என கருதப்படும் சிலவற்றில் ஒன்றான இந்தோனேசியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் 8 லட்சம் வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
இந்தோனேசியாவின் 19.3 கோடி மக்கள், தேர்தலின் மூலம் குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் உலகின் மிகப்பெரிய குடியரசுத்தலைவர் தேர்தலில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும், இந்தோனேசியா இந்தமுறை தனது குடியரசுத்தலைவர் தேர்தல் மட்டுமல்லாமல் நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றாக சந்திக்கிறது. எனினும் இந்தோனேசியாவில் தற்போதைய குடியரசுத்தலைவரான ஜோகோ விடோடோ மற்றும் எதிர்க்கட்சியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் பிரபோவோ சுபியண்டோவிற்கு இடையிலான தேர்தலே முழு கவனத்தையும் கொண்டிருந்தது.