tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : வால்ட் விட்மன் பிறந்த நாள்

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் நெடுந்தீவில் பிறந்த விட்மன் இதழாளர், பள்ளி ஆசிரியர், அரசாங்க எழுத்தர், அமெரிக்க உள்நாட்டுப் போரில் தன்னார்வலச் செவிலியர் என பல வேலைகளைச் செய்தார். 1842ல் பிராங்ளின் எவன்ஸ் என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் புதினத்தை எழுதினார். 1855ல் அவருடைய மிக முக்கிய கவிதைப் படைப்பான ‘லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ - புல்லின் இதழ்கள் வெளியானது. சொந்த செலவில் முதலில் இதனைப் பதிப்பித்த விட்மன் 1892ல் இறக்கும் வரை இதனைத் திருத்தி எழுதி வேறு பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார். சாதாரண மக்கள் படிக்கத்தக்க ஒரு காவியத்தை இயற்ற விட்மன் மேற்கொண்ட முயற்சியே ‘லீவ்ஸ் ஆஃப் கிராஸ்’ உருவாகக் காரணமாயிற்று. பாலியல் விஷயங்களை வெளிப்படையாகப் பேசியதால் இந்நூல் வெளியான காலகட்டத்தில் பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது. அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த விட்மன் அமெரிக்காவில் அடிமை முறையினை எதிர்த்தார். அவரது படைப்புகளில் இன அடிப்படையில் அனைவரும் சமமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.