tamilnadu

img

விண்வெளியில் நடந்த முதல் குற்றம்!

விண்வெளியில் நடந்த முதல் குற்றமாக  அமெரிக்காவைச் சேர்ந்த ஏன் மெக்லைன் என்ற வீராங்கனை மீதுதான் புகார் எழுந்துள்ளது.

விண்வெளியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இங்கே தங்கியிருந்து விண்வெளி ஆய்வில் ஈடுபடுவார்கள்.

இந்நிலையில் முன்னாள் வாழ்க்கைத்துணையின் வங்கிக்கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் ஏன் மெக்லைன் மீது புகார் எழுந்துள்ளது.

தமது முன்னாள் கனவருக்கு சொந்தமான வங்கிக் கணக்கை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதற்காக மெக்லைன் மீது அவரது முன்னாள் வாழ்க்கைத்துணை சம்மர் வொர்டன்  மத்திய வர்த்தக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக  நாசா தனிக்குழுவை அமைத்து விசாரித்து வருகின்றனர்.