மாஸ்கோ
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில் எதிக்கட்சி அந்தஸ்து தலைவராக இருப்பவர் அலெக்ஸி நவல்னி. இவர் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருபவர்.
இந்நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சைபீரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது செய்தி தொடர்பாளர்கள் கிரா யர்மிஷ், அலெக்ஸியை தேநீரில் விஷம் வைத்து கொல்ல முயற்சித்துள்ளன்ர் எனவும் தற்போது அலெக்ஸி கோமா நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அலெக்ஸி கடந்த 2017-ஆம் ஆண்டு நச்சுதக்குதலில் இருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.