tamilnadu

img

பிலிப்பைன்ஸ் நாட்டின் குகையில் கற்கால மனித இனத்தின் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் குகையில் கற்கால மனித இனம் ஒன்றின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஹோமோ லூசோனென்சிஸ்(Homo luzonensis) என அழைக்கப்படும் உயரம் குறைவான கற்கால மனித இனத்தின் புதிய பிரிவாக உள்ள மனிதர்களின் உடல் பாகங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் லூசோன் தீவில் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தின் கால எல்லையை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த மனிதர்கள் சுமார் 50 ஆயிரத்திலிருந்து 67 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


ஹோமோ லூசோனென்சிஸ் மனித இனம் 3 அடிக்கும் குறைவான உயரம் கொண்டிருந்திருக்கிறார்கள் எனவும், மிகச்சிறிய மூளையை உடையவர்கள் எனவும் இந்த அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல்கள் மனித இனத் தோற்றத்தில் உள்ள குழப்பங்களுக்கு வழு சேர்த்துள்ளதாக உள்ளதாகவும், ஹோமோ லூசோனென்சிஸ் உலக தொடர்பில் இல்லாது தனியாக தீவுகளில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.