tamilnadu

img

செல்ஃபி செய்த கொலைகள்!

தன்னைத்தானே சுயமாகப் படம் பிடித்துக் கொள்வதுதான் செல்ஃபி. இதற்க்கு உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் அடிமையாகிக் கொண்டே வருகின்றனர். இத்தகைய செல்ஃபி மோகத்தால் அபாயகரமான இடங்களில் நின்று செல்ஃபி எடுத்து பல உயிர்கள் பறிபோய் உள்ளன.

இது குறித்த ஆய்வு ஒன்றில், கடந்த 2011 முதல் 2017 ஆண்டு வரையிலான காலத்தில் 259 பேர் செல்ஃபியினால் இறந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. 
இந்தியாவில் செல்பி எடுக்கும்போது விபத்தில் சிக்கி மட்டுமே 159 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் மிக உயரமான கட்டிடங்களில் இருந்து செல்ஃபி எடுத்து பலர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

புகைப்படங்கள் எடுப்பது ஒருவகையில் நினைவுகளை சேகரித்தல்தான் ஆனாலும்  மனித உயிரை பறிகொடுத்து நினைவுகளை சேகரிப்பதில் என்ன பயன்.