tamilnadu

img

கட்டுக்குள் கொரோனா... சீனாவில் பயண கட்டுப்பாடுகள் தளர்வு

பெய்ஜிங்
புதிய ஆட்கொல்லி வைரஸான கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் தனது முதல் நிலை ஆட்டத்தைத் துவங்கியது. 

லட்சக்கணக்கில் மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகத் தினமும் பலி எண்ணிக்கை உயர்ந்தது.  இதனால் சீன அரசு ராணுவத்தைக் களமிறக்கி  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தது. புதிய தொழினுட்பம் மூலம் சிறிய சந்து பகுதியைக் கூட விடாமல் அனைத்து பகுதிகளிலும் நச்சு மருந்தைத் தெளித்து கொரோனா வைரஸை அழித்தது. 

தற்போது இயல்பு நிலை சீரானதை தொடர்ந்து பயண கட்டுப்பாடுகள்  சீனாவில் தளர்த்தப்பட்டுள்ளன. அதாவது இன்று இரவு முதல் உடல்நலமுடன் உள்ளவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும் வைரஸ் தோன்றிய வுஹான் நகரில் வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இந்த விதிமுறைகள் தளர்த்தப்படவில்லை.