பாரிஸ்
ஐரோப்பா கண்டத்தில் வளமிக்க நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் கொரோனாவால் அதிக சேதாரத்தை சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில், 72 ஆயிரத்து 572 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்தததால் பிரான்ஸ் விரைவில் கொரோனா இல்லாத தேசமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நாட்டில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. 2 நாட்களுக்கு முன்னர் 425 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று 726 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தினசரி பலி எண்ணிக்கை 30-க்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.