tamilnadu

img

கொரோனா பாதிப்பு... ஜெர்மனியிலும் 2-வது அலை...

பெர்லின் 
ஐரோப்பா கண்ட நாடுகள் கொரோனா எழுச்சி பெற்ற காலத்திலிருந்தே அதிக பாதிப்பைச் சந்தித்தது. மே கடைசி  வாரத்தில் அங்குள்ள நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளது.

பச்சை மண்டலம் பெறவில்லை என்றாலும், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் தினசரி பாதிப்பு 500-க்குள் உள்ளது. ஸ்பெயின் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்கியுள்ள நிலையில், ஜெர்மனியிலும் கொரோனா வைரஸ் தனது 2-வது அலையை தொடங்கியுள்ளது. 

கடந்த 2 மாத காலமாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 500-க்குள் (2 நாட்களை தவிர) இருந்தது. ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் புதிய உச்சமாக 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 2.03 லட்சமாக உயர்ந்துள்ளது. தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை சற்று மந்தம் தான். மொத்த பலி எண்ணிக்கை 9,175 ஆக உள்ளது. 1.87 லட்சம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.