பிரேசில் நாட்டின் சிறை ஒன்றில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 15 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேசிலின் அமேசனாஸ் பகுதியில் உள்ள சிறை வளாகம் ஒன்றில் இன்று மதியம் திடீரென்று கைதிகளுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சுமார் 15 பேர் பலியாகினர். இதுகுறித்து அமேசானாஸ் சிறைச் செயலாளர் மார்கஸ் கூறுகையில், பாதுகாப்புகாக பலத்த ஏற்பாடுகள் செய்யப்ப்ட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். மேலும், வன்முறைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கைதிகள் யாரவது தப்பிச் சென்றுள்ளனரா என்ற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அமேசனாஸ் பகுதியை சுற்றியும் ஹெலிகாப்டர்கள் சில தேடுதல் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.