ஸ்ரீநகர்:
ஜம்மு- காஷ்மீர் பிரதேசத்திலுள்ள நாசருல்லாபுரா என்ற கிராமத்திற்குள் புகுந்து, அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார், வீடுகள், கடைகளை சூறையாடி பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர்.
ஸ்ரீநகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்தில், தொழுகைகள் நடத்தக் கூடாது என்று பட்காம்காவல்நிலைய போலீசார் கூறியதாகவும், இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், போலீஸ் ஒருவரைத்தாக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த பின்னணியிலேயே லாரியில் வந்திறங்கிய 40-க்கும் மேற்பட்டபோலீசார், வீடு வீடாகப் புகுந்து கிராமமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய அவர்கள், கடைகளை உடைத்து பொருட் களையும் கொள்ளையடித்துள்ளனர். வீடுகளில் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.அத்துடன் தொடர்ந்து 4 நாட்கள்கிராமத்திற்குள் சோதனை என்ற பெயரில் அத்துமீறல்களை அரங்கேற்றியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான பின்பே, போலீசாரின் இந்த அராஜகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊடகங்களும் நாசருல்லாபுரா கிராமத்திற்கு சென்றுள்ளனர்.“இவ்வளவு காலம் உழைத்து, என்னவெல்லாம் சேர்த்தோமோ அத்தனையும் போய்விட்டது” என்றுஅப்துல் ஹமீது பட் என்பவர் ஊடகங்கள் முன்பு கதறியுள்ளார்.நான் ஒரு அநாதை; என்னையும் என் சகோதரியையும் என் மாமாதான் காப்பாற்றி வந்தார்; ஆனால் தற்போது அவரது உடமைகள் அனைத்தையும் போலீசார் அடித்து நொறுக்கிவிட்டனர். இதனால் நாங்கள் நிர்க்கதியாக நிற்கிறோம் என்று லதீபா என்றபெண்மணியும் புலம்பித் தவித்துள் ளார்.தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் குலாம்முகமது தார், “போலீஸ் அதிகாரியைத் தாக்கியவர்களை தண்டிக்க வேண்டியதுதான். ஆனால் தனிமனித சொத்துக்களை எப்படி சூறையாடலாம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.