ஸ்ரீநகர்:
நீண்ட நாள்களாக தடுப்புக்காவலில் இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுவிக்கப்பட்டார்.மத்திய பாஜக அரசு ,காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து, அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து சிதைத்தது. அரசியல்கட்சித் தலைவர்களை தடுப்புக்காவலில் வீட்டுச்சிறையில் வைத்தனர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான யூசுப் தாரிகாமிஆகியோர் தடுப்பு காவலில் வைக்கப் பட்டனர். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரூக் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் உமர் அப்துல்லாமீதான பொது பாதுகாப்பு சட்ட நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டு, 8 மாதங்ளுக்கு பிறகு விடுவிக்கப்பட் டுள்ளார்.