ஹைதராபாத்:
தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்துவிசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையஅதிகாரிகள் சனியன்று ஹைதராபாத் வந்தனர்.முதலில் அவர்கள், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற இடமும், என்கவுண்ட்டரில் நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்ட இடமுமான ஷத்நகரின் சடன்பள்ளி கிராமத்தில் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்துகிறார்கள்.சம்பவ இடத்துக்கு வரும் தேசிய மனிதஉரிமைகள் ஆணைய அதிகாரிகள், என்கவுண்ட்டர் எப்படி நடந்தது என்பது பற்றிவிசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், என்கவுண்ட்டரில் ஈடுபட்டகாவல்துறை அதிகாரிகளிடமும் விசாரணைநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், நான்கு பேரின் உடல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து, உடல்களை ஆய்வு செய்யவிருக்கும் அதிகாரிகள், உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினரையும் சந்தித்துப்பேச உள்ளனர்.அதோடு, பெண் மருத்துவர் கடத்தப்பட்ட டொண்டுபள்ளி சுங்கச்சாவடிக்கும் நேரில் வந்து அதிகாரிகள் விசாரணைநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.