tamilnadu

img

பெண்களைப் பார்த்து மோடி அரசு பயப்படுகிறது... வீட்டுச்சிறையில் இருக்கும் மெகபூபா முப்தி விமர்சனம்

ஸ்ரீநகர்:
காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு உரிமைகளைப் பறித்தமோடி அரசு, அம்மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டஅரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2019 ஆகஸ்ட் 4-ஆம் தேதி கைதுசெய்தது.

இவர்கள் அனைவரும், வெவ் வேறு இடங்களில் வீட்டுச்சிறை வைக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டமும் (PuplicSafety Act- PSA) ஏவப்பட்டது.மத்திய அரசின் இந்த நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தன. கைது செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து வந்தன.இதையடுத்து, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மட்டும், கடந்த மார்ச் 13-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். தற்போது, பரூக் அப்துல்லாவின் மகனும் காஷ்மீர் முன்னாள்முதல்வருமான உமர் அப்துல்லாவும் 8 மாத வீட்டுச்சிறைக்குப் பின், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், வீட்டுச்சிறையில் இருக்கும் மற்றொரு முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி டுவிட்டரில் பதிவுஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உமர் அப்துல்லா விடுதலைக்கு, மகிழ்ச்சி தெரிவித்து இருப்பதுடன், ‘இந்த அரசு பெண்கள் முன்னேற்றம் பற்றித் தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால், பெண்களைப் பார்த்துத்தான் அதிகம் பயப்படுகிறது,” என்று தன்னை இன்னும் தொடர்ந்து வீட்டுச் சிறையில் வைத்திருப்பது குறித்து மெகபூபா விமர்சித்துள்ளார்.