tamilnadu

img

காஷ்மீர் மக்கள் வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை... ஆளுநர் சத்யபால் மாலிக் சொல்கிறார்

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் ஆப்பிள்களை இனி மத்திய அரசே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளும் என மத்திய உள்துறை அமித்ஷா அறிவித்தார்.“ஏ, பி, சி என்ற எல்லா தர ஆப்பிள்களும் 12 லட்சம் மெட்ரிக் டன் வரை கொள்முதல் செய்யப்படும்; இதற்கான மானியங்கள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில்நேரடியாகச் செலுத்தப்படும்; விவசாயிகளிடமிருந்து நேர்மையான முறையில் கொள்முதல் நடக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

இதன்படி, மத்திய அரசின் ஆப்பிள் கொள்முதலைக் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் வியாழக்கிழமையன்று தொடங்கி வைத்துப் பேசியுள்ளார். அப்போது, “தற்போது தில்லியில் உங்களுக்கு (காஷ்மீர்மக்களுக்கு) நிறைய அனுதாபம் உள்ளது. மத்திய அரசிடம் நீங்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம். இன்று மொத்த இந்தியாவும் உங்களுக்குச் சொந்தம். அதனால் எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும். இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. காஷ்மீர் மக்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். முடிந்த வரலாற்றுச் சக்கரம் திரும்பாது. அதை யாராலும் மாற்ற இயலாது” என்று கூறியுள்ளார்.