ஸ்ரீநகர்:
தனது தாயாருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மத்திய பாஜக அரசுதான் முழு பொறுப்பு என்று மெஹபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கிவந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு, மாநில அந்தஸ்தையும் பறித்துக் கொண்டு, யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. அதற்குமுன்னதாக ஆகஸ்ட் 4-ஆம் தேதியே மெகபூபா முப்தி உள்ளிட்ட காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறை வைக்கப் பட்டனர். இவ்வாறு சிறைவைக்கப் பட்ட நாள் முதலே, மெகபூபா முப்தியை விடுவிக்க வேண்டும் என்று அவரது மகள் இல்திஜா முப்தி, தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், தனது தாயார் மெகபூபா முப்தியை வேறு ஒரு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று கடந்த மாதம் கூடஸ்ரீநகர் துணை ஆணையருக்கு, கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால், பாஜக அரசோ, முன்னாள் முதல்வர்களின் சிறைக்காலத்தை மேலும் நீட்டித்துள்ளது.
இந்நிலையில், மெகபூபா முப்தி, தனது டுவிட்டர் பக்கத்தில்,புதிய பதிவு ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில், “ஒரு மாதத் திற்கு முன்னதாகவே எனது தாயார் முப்தியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று துணைஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அது நடந்ததாகத் தெரியவில்லை. எனது தாய்க்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் முழுபொறுப்பாகும்” என்று குறிப் பிட்டுள்ளார்.