ஹைதராபாத்:
மத்திய அரசு தங்களுக்கு உரிய நிதியைக் கொடுக்காவிட்டால் மக்களின் போராட்டம் வெடிக்கும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பைசந்தித்துள்ளது. தெலுங்கானா அரசின் மாத வருவாய் ரூ. 17 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. ஆயிரத்து 600 கோடியாக சரிந்துவிட்டது. பிரதமர் மோடியுடனான வீடியோ கான்பரன்சிங் போது, பல்வேறு விஷயங்களை தெளிவாக எடுத்துரைத்தேன்.மத்திய அரசிடம் பரந்த நிதிக்கொள்கை இருக்கிறது மற்றும் அதிகாரம் இருக்கிறது. எனவே, மாநிலங்களுக்கு நிதியை வழங்குங்கள் அல்லதுஅதிகாரத்தை வழங்குங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றேன்.மாநிலங்கள் சுயமாக நிதியை பெருக்கிக் கொள்வதற்கான வழிகளையும் தெரிவித்தேன். மாநிலங்கள் பட் ஜெட் மேலாண்மை மீது கடன் பெறும் அளவை உயர்த்துங்கள் என்றேன். எங்களுக்கு கடன் இருக்கிறது, அதைசெலுத்தும் காலத்தை ஒத்திவையுங் கள் என்றேன்.
ஆனால், எதற்கும் பிரதமரிடம் இருந்து பதில் வரவில்லை.மாநிலங்களுக்கு இருக்கும் கடனால் மத்திய அரசுக்கு என்ன சுமைவந்துவிடப்போகிறது என்பது எனக்குப்புரியவில்லை. மத்திய அரசின் கொள்கை என்ன, என்பதும் எனக்குத் தெரியவில்லை. இன்னும் சிறிதுகாலம் பொறுமையாக இருப்பேன்; ஆனால் அப்போதும் எதுவும் நடக்காவிட்டால் தெலுங்கானா சார்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பும்.
மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம் உண்மையில் எனக்கு வேதனையாக இருக்கிறது. மத்திய அரசின் செயல்பாட்டுக்கு இந்த தேசம்மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது.இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.