tamilnadu

img

இன்று கோட்டை முற்றுகை

மாதர் சங்க நடைபயணக் குழு  சென்னைக்குள் நுழைந்தது
 

செங்கல்பட்டு, டிச.3 அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்றுவந்த நடைபயணக்குழு சென்னைக்குள் நுழைந்தது. “வன்முறையற்ற, போதையற்ற தமிழகத்தை அமைப்போம்’’   என்ற முழக்கத்துடன் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் வட லூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் இருந்து கோட்டை நோக்கி  400 கி.மீ நடைபயணம்  கடந்த நவ.25 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 9 நாட்கள் சுமார் 360 கி.மீ தூரத்தை கடந்து நடைபயணக்குழு சென்னை மாநகருக்குள் செவ்வாயன்று (டிச.3) மாலை  நுழைந்தது.  வடலூரிலிருந்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையிலான குழு வும், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையிலான குழு உள்ளிட்ட இரண்டு குழுக்களும் சென்னையின் நுழைவாயிலான தாம்பரத்தில் சங்கமித்தன.

பல்வேறு அமைப்புகள் வரவேற்பு

அவ்விரு பயணக்குழுவிற்கும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.பாக்கியம் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியச் சென்னை) மாநிலக்குழு உறுப் பினர்கள் க.பீம்ராவ், டி.ரவீந்திரன், ஆர்.வேல்முருகன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், க.சுவாமிநாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார், சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ,பொன்முடி, பா.பால கிருஷ்ணன் உள்ளிட்டு இந்திய மாண வர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்., சிறுபான்மை மக்கள் நலக்குழு, தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய மாதர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வரேவேற்பளிக்கப்பட்டது.

ஆர்.நல்லகண்ணு வாழ்த்து

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னு, நீதியரசர் சந்துரு, மாதர் சங்க அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செய லாளர் மரியம் தாவ்லே, உலக பாலியல் சுகாதார மையத்தின் நிர்வாகி டாக்டர் ஜெயராணி காமராஜ் உள்ளிட்டோர்  மாதர் சங்க நடைபயணத்தை வாழ்த்திப் பேசினர்.  நடைபயணத்தில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் ஆர்.நல்லக்கண்ணு, மாலினி பட்டாச்சார்யா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் ஆர்.நல்லகண்னு, நீதியரசர் சந்துரு, மாதர் சங்க அகில இந்திய தலைவர் மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செய லாளர் மரியம் தாவ்லே, உலக பாலியல் சுகாதார மையத்தின் நிர்வாகி டாக்டர் ஜெயராணி காமராஜ் உள்ளிட்டோர்  மாதர் சங்க நடைபயணத்தை வாழ்த்திப் பேசினர்.  நடைபயணத்தில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் ஆர்.நல்லக்கண்ணு, மாலினி பட்டாச்சார்யா ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்

கோட்டை நோக்கி...

புதனன்று (டிச.4) காலை தாம்பரத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலை யில் குரோம்பேட்டை, பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, சைதாப்பேட்டை வழியாக  கோட்டை நோக்கி அணிவகுக்க உள்ளனர். 

வழியெங்கும் வரவேற்பு 

முன்னதாக வடலூரிலிருந்து துவங்கிய குழுவிற்குச் செவ்வாயன்று செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், தைலா வரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மின் ஊழி யர் மத்திய அமைப்பு, வங்கி ஊழி யர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளின் சார்பில் உற்சாகத்து டன் கூடிய வரவேற்பு வழங்கப்பட்டது. 

திருவண்ணாமலை குழுவினர்

திருவண்ணாமலையில் இருந்து  புறப்பட்ட குழுவினர் செவ்வாயன்று காலை திருப்பெரும்புதூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட சொரப்பனஞ்சேரி யில் இருந்து புறப்பட்டு படப்பை வழியாக தாம்பரம் வந்தடைந்தனர்.  பயணக்குழுவினரை சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருபெரும்புதூர் பகுதி செயலாளர் ரமேஷ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ. சங்கர்  ஆகியோர் வரவேற்றுப் பேசினர். இதில் காஞ்சிபுரம் ஒன்றி யச் செயலாளர் லாரன்ஸ் , மாவட்டக் குழு உறுப்பினர் கே.நேரு உள்ளிட் டோர்  கலந்துகொண்டனர்.  சாலமங் கலத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிர்வாகிகள் அஞ்சலியம்மாள், ராம லட்சுமி, தாட்சாயணி பயணிகளுக்கு சால்வையணிவித்து தேநீர் வழங்கி னார். 

அரசு ஊழியர்கள் 

படப்பையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது..அரசு ஊழியர் சங்க  செயலாளர் டி.மருதன் தலைமை யில் ஊரக வளர்ச்சித் துறை மாவட் டப் பொருளாளர் எல்.திருமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கோ பால் ஆகியோர் வரவேற்றனர். உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள் பிரேமகுமாரி, பகுதி செயலாளர் ஸ்ரீதேவி, ரேணுகா தேவி, ரீட்டாமேரி பயணக்குழுவின ருக்கு சால்வை அணிவித்தனர். இதில்  சிஐடியு நிர்வாகிகள் திருஞானம், செல்வம், டிஒய்எப்ஐ கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள் வரவேற்பு 

கரசங்கால் பகுதியில் விவ சாயிகள்  சங்கம் சார்பில்  கே.நேரு, இ.லாரன்ஸ், பி நீலகண்டன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் லிங்க நாதன், அனில் குமார்,கட்டுமான சங்க நிர்வாகி நந்தகோபால் வரவேற்றனர். வட்டக் குழு உறுப்பினர் புரு ஷோத்தமன், ஆர்.சுகுமார், மாதர்  சங்க நிர்வாகிகள் எஸ்.ரேணுகாதேவி, ஸ்ரீதேவி, சரசு உட்பட திரளாக கலந்து கொண்டு வரவேற்பளித்தனர். இங்கு, சிபிஎம் வடசென்னை மாவட்டச் செய லாளர் சுந்தரராஜன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ. பாக்கியம், வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. கே. சண்முகம், ஆர். ஜெயராமன், ராமகிருஷ்ணன் ஆகி யோர் மாதர்சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.