நிதி வழங்காத, மதுக்கடைகளை திறந்த மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்
சென்னை, மே 7- கொரோனா தடுப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய மத்திய அரசு , மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பேரிடர் கால நிவாரண நிதியை மாநிலங்களுக்கு வழங்காத தைக் கண்டித்தும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழக அரசைக் கண்டித்தும் மாநிலம் முழு வதும் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் சார்பில் கருப்புச் சின்னம் அணிந்து, கருப்பு கொடிகளை ஏந்தி மே 7 வியாழனன்று காலை 10 மணி முதல் 10.15 வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள மாநி லக்குழு அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.கும ரேசன், வழக்கறிஞர் அணி தலைவர் த.வீரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கடலூர் மாவட்டம் அருகே கீரப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமை யில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தென்சென்னை மாவட்ட செய லாளர் எஸ். ஏழுமலை கலந்துகொண் டார். மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் தலைமையில் நாகப்பட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, சிபிஐ ஒன்றியச் செயலாளர் பாண்டியன் ஆகி யோர் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டார்.
விசிக தலைவர் தொல்.திருமாவள வன் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கலந்து கொண்டார். சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அலுவலகம் முன்பு தேசிய தலைவர் பேராசியர் கே.எம்.காதர் மொய்தீன் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் எம்.எச்.ஜவாஹிருல்லா சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் முகமது அலி, அண்ணாநகர் பகுதி தலைவர் முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாநிலம் முழுவதும் தோழமைக் கட்சியினரைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் மற்றும் பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் தலைவர்கள் பங்கேற்ற னர். மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன் தலைமை வகித் தார். மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.