tamilnadu

img

கொரானோ வைரஸ்

சின்னாளபட்டியில் போதுமான கண்காணிப்பு இல்லை

சின்னாளபட்டி,  மார்ச் 26- சின்னாளபட்டி வட்டா ரத்தில் கொரோனா வைரஸ் சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.  திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள மேட்டுப்பட்டி, வள்ளுவர் நகர், இராணிஅண்ணா காலனி, அஞ்சுகம் காலனி, ஸ்ரீதேவி நகர், காமாட்சிநகர் காலனி, கவுண்டர்தெரு, வி. எம்.எஸ்.காலனி, 12-ஆவது வார்டு மற்றும் சாந்திநகர், சோமசுந்தரம் காலனி, கலை ஞர் கருணாநிதி காலனி, திரு. வி.க.நகர் ஆகிய பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் சுமார் இரண்டாயிரம்  பேர் தென் ஆப்பிரிக்கா, மொரீசி யஸ், சிங்கப்பூர், மலேசியா,  கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுக ளுக்கும் இந்தியாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் சென்று ஜவுளி வியாபாரம் செய்துவிட்டு திரும்புகின்ற னர். ஜவுளி வியாபாரம் செய்பவர்களில் நூற்றுக்க ணக்கானோர் ‘குருவி’ போல் செயல்பட்டு ஜவுளி ரகங்க ளை வாரம் ஒருமுறை மேற் கண்ட நாடுகளுக்கு சென்று கொடுத்துவிட்டு திரும்பி வருகின்றனர். கடந்த 20 நாட்க ளாக சின்னாளபட்டியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளி லிருந்தும், வெளி மாநிலங்க ளிலிருந்தும் திரும்பி வந்துள் ளனர். இவர்களை முறை யாக சோதனை செய்ய வேண்டும்.

குறிப்பாக மேட்டுப்பட்டி வள்ளுவர்நகர், ஸ்ரீதேவி நகர், சாந்திநகர், சோம சுந்தரம் காலனி மற்றும் கரு ணாநிதி காலனியில் வசிப்ப வர்கள் பலர் வெளிநாடுகளி லிருந்து வந்துள்ளனர். அவர்களை இன்றுவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தவில்லை.  சின்னாளபட்டி மேட்டுப்பட்டி என்.சி.சி.சாலையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேர் கடந்த மார்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி யுள்ளனர். ஆனால் அவர்கள் சுதந்திரமாக தெருக்களில் நடந்துசென்றதாகக் கூறப்படு கிறது. இதுகுறித்து சின்னா ளபட்டி வட்டார சுகாதார ஆய்வாளர் விஜய்ஆனந்தி டம் புகார் செய்தும்  நடவடிக் கையும் எடுக்கவில்லை.  கீழக்கோட்டை ஜான்சிராணி தெரு, சுப்பன்செட்டியார் தெரு பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து ஜவுளி வியாபாரிகள் வந்துள்ளனர். அவர்களையும் மருத்துவத் துறை அதிகாரிகள் தனிமைப் படுத்தவில்லை. 

சின்னாளபட்டி நடூர் மடத்துத் தெருவைச் சேர்ந்த டி.உதயகுமார், திரு.வி.க. நகரை சேர்ந்த வி.ஞானப் பிரகாசம், அவருடைய மனைவி ஜி.அந்தோணியம் மான், என்.சி.சி தெருவை சேர்ந்த எஸ்.ராஜவேலு, 15-ஆவது வார்டு ஜெ.கே.நகரை சேர்ந்த பாலகிருஷ்ணா அசோக்குமார் உட்பட ஆறு பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.  சின்னாளபட்டியில் உள்ள அனைத்து தெருக்களி லும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து  வந்தவர்களை கணக்கெடு க்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டு மென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.