tamilnadu

img

கொரானாவிற்கு பதுங்குவதா? குடிநீருக்காக அலைவதா?

இலங்கை அகதிகள் வேதனை

உயிர்கொல்லி தொற்று நோய்  கொரானாவிற்காக வீட்டி னுள் பதுங்கி கிடப்பதா அல்லது குடிநீர் தேடி அலைவதா என  கள்ளக் குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இலங்கை அகதி கள் முகாமில் வசிக்கும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து அகதிகளும் வேதனை தெரிவிக்கின்றனர். கொரானா வைரஸிற்கு எதிராக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன  சேலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இலங்கை அகதி கள் முகாமில் வசிக்கின்ற இலங்கை  அகதிகளின் நிலை குறித்து அறிவ தற்காக ஜல்லிகள் பெயர்ந்து இருந்த சாலையை கடந்து சென்றோம்.

சின்னசேலம், அதனை சுற்றி இயங்கும் அரிசி ஆலைகளில் மூட்டை தூக்கி பிழைக்கும் தினசரி கூலித் தொழிலாளிகளாக உள்ளனர். ஊரடங்கின் விளைவாக ஆலைகள் இயங்காததால் இலங்கை அகதி களின் குடும்பத்தினர் பசி, பட்டினி யோடு இருப்பது ஒருபுறம் என்றா லும் இவர்கள் குடிநீருக்கே அலை யும் பரிதாபத்தை நேரில் காண முடிந்தது. “இங்கு 75 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் கோழிக் கூண்டு போல கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் முழு வதும் சேதம் அடைந்த நிலையில்  புதுச்சேரியை சேர்ந்த கிருத்துவ  மிஷனரி மூலம் 7 ஆண்டுகளுக்கு முன் வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டன. ஆனால், ஒப்பந்ததாரரின் சுயநலத் தால் தரமற்ற வகையில் வீடுகள் கட்டப்பட்டதால் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகவே மழைக்கு ஒழுகுகின்றன.

“வீடுகளை சீரமைப்பதற் கென்று 2016-17 நிதியாண்டில் 27  லட்ச ரூபாய் அரசு நிதி ஒதுக்கியும் பயனற்று கைவிடப்பட்ட ஆரம்ப கால வீடுகளைதான் சரி செய்வோம்;  தொண்டு நிறுவனம் மூலம் கட்டப்பட்டு தற்போது குடியிருந்து வரும் வீடுகளை பழுது பார்க்க மாட்டோம் என கூறி நிதியை திருப்பி  அனுப்பிய அவலமும் அரசு நிர்வாகத்  தால் நடைபெற்றுள்ளது” என முகாம் குடியிருப்போரின் தலைவர் மோகன் கூறுகிறார். கடுமையான தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது.  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் வாரத்திற்கு ஒருமுறை ஒரு வீட்டிற்கு 20  குடம் தண்ணீர் வழங்கப்படு கிறது. இது இங்கு வசிக்கும்  245 பேருக்கும் எப்படி போதும்? எனவே குடிநீருக்காக விவசாய நிலங்களைத் தேடி அலைந்து வருகிறோம். குடி யிருப்பை ஒட்டி இருக்கக் கூடிய விவசாயி ஒருவர் குடிநீர் கொடுத்து வருகிறார்.

ஆனால், கோடையில் நிலத்தடி நீர்மட்டம் இறங்கும் போது இதுவும் கிடைப்பது சந்தேகம்தான். எனவே உடனடியாக குடிநீர் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் கோரினார் மோகன்.   இதனையே எதிரொலிக் கின்றனர் 43 வயதான சுலோ சனா, 45 வயதான விஸ்வ லிங்கம், 50 வயதான சிந்தா மணி உள்ளிட்ட இலங்கை அகதிகள்.

போர் போட்டு முற்றுப்  பெறாததால் அதுவும்  வீணாகி கிடக்கிறது. 1000 லிட்டர் நீர்  250 ரூபாய் என வாங்கி கூட்டாக   அத்தியாவசிய தேவைகளுக்கு  பயன்படுத்துகின்றனர். இதுவும் பணம் இல்லாத போது கிடைக்காது.  இதனால் குடும்பத்தினருக்குள் சச்சர வுகளும் ஏற்படுகிறது என்றனர்.  தெருக்களில் குடிநீர் குழாய்களில் காற்றுதான் வருகிறது. ஊரடங்கு காலத்தில் ரேஷன் பொருட்கள், ஆயிரம் ரூபாய் மட்டுமே  வழங்கப்பட்டுள்ளது. (5 கிலோ 3 கிலோ  என அரிசியும் சில காய்கறிகளும் முறையே சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு மற்றும் உதயசூரியன் ஆகியோரால் வழங்கப்பட்டது.) “ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 27  நாட்களை கடந்த நிலை யில் வேறு  எந்த உதவியும் இல்லாத நிலை நீடிக்கி றது. ஜன்தன் வங்கிக் கணக்கி லும்  இங்கு உள்ள மாற்றுத் திறனாளிகள், முதியோர் 15 பேரின் கணக்கு தவிர  வேறு யாருக்கும் 500 ரூபாய் வழங்கப்படவில்லை.

இலவச சிலிண்டர் இணைப் பும் இந்த முகாமில் உள்ள யாருக்கும் வழங்கப்பட வில்லை என்கின்றனர். தண்ணீர் பிரச்சனையோடு தினசரி உணவிற்கே குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்டு வரு கின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட் களை தேவையான அளவிற்கு நிவா ரணமாக வழங்க வேண்டும்” என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னசேலம் வட்ட செயலாளர் மாரிமுத்து அரசை வலியுறுத்தினார். மணலை கயிறாய் திரிக்கும் மாநில அரசும்  வானத்தை வில்லாய்  வளைக்கும் மத்திய மோடி அரசும் சின்னசேலம் இலங்கை அகதிகள் முகா மில் வசிக்கும் பரிதாபத்திற் குரிய தாய்த்தமிழ் மூத்த குடிகளை யாவது கவனிக்குமா...?

-வி.சாமிநாதன்