tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு சுங்கக் கட்டணத்தில் விலக்களிக்கக் கோரிக்கை

சென்னை, பிப். 4- நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் நெடுஞ்சாலைத் துறையின் சுங்கக் கட்ட ணம் தீர்மானிப்பதற்கான விதிகளில் உரிய திருத்தம்  மேற்கொள்ள,  நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊன முற்றோர் உரிமைகளுக் கான தேசிய மேடை கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கு பொதுச் செயலாளர் அனுப்பிய மனுவின் சுருக்கம் வருமாறு:

உடல் ஊனமுற்றோர், அறிவுத்திறன் பாதித்தோர்,  மனநலம் பாதித்தோர், தீவிர நரம்பு மண்டல பாதிப்பு, இரத்த ஒவ்வாமை காரணங்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனத்தால் பாதிப்பு அடைபவர்கள் என 5 விரிவான பிரிவுகளாக மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 அடை யாளப்படுத்துகிறது. ஆனால், உடல் ஊனமுற்ற மாற்றுத்  திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், பிரத்யேக மாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் தற்போது நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்ட ணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும்  நடைமுறை உள்ளது. இந்நடைமுறை மாற்றுத்திற னாளிகளிடையே அரசு வெளிப்படையான பாகுபாடு  காட்டும் செயல்பாடாக உள்ளது. சொந்த வாகனம் வைத்துள்ள மாற்றுத்திறனாளி களும்கூட, பொருத்தமற்ற தற்போதைய சாலைகளில்,  தங்களால் வாகனத்தை ஓட்டிச்செல்ல  முடியாத காரணத்தால், பல நேரங்களில் ஓட்டுனர்களை பணிய மர்த்திச் செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது.  இந்நிலையில், “உடல் ஊனமுற்ற மாற்றுத்திற னாளிகள் பயன்படுத்தும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் விலக்கு” என தற்போது வலியறுத்தும் விதியால், வாக னத்தை மாற்றுத்திறனாளியே ஓட்டிவரவேண்டும் என்ற  சுங்கச்சாவடி பணியாளர்களின் தவறான புரிதல்களி னால்  பல நேரங்களில் சுங்கச்சாவடிகளில் குழப்பங்கள்  எழுகின்றன என்பதை கவனப்படுத்துகிறோம். எனவே, மாற்றுத்திறனாளிகள் படும் இந்த சிரமங்  களை கணக்கில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சுங்கக் கட்டணம் விதி 8(ஐஐ) (இ)ல் “மாற்றுத்திறனாளிகள் செல்லும் சொந்த மற்றும் வாடகை இலகு ரக வாகனங்களுக்கு விலக்கு” என  மாற்றம் செய்ய வேண்டும்.  மேலும், மாற்றுத்திறனாளி கள் செல்லும் வாகனங்கள் தடையில்லாமல், விரை வாக செல்லும் பாதை சிறப்பு அனுமதியும் வழங்க வேண்டுகோள் விடுக்கிறோம்.   இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.