tamilnadu

img

மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் உடல் அடக்கம்

சேலம், பிப். 8- தமிழக மருத்துவர் சங்கத்தின்  தலைவரும், மார்க்சிய போராளி யாகவும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்காக தொடர்ந்து பல கட்டங்களில் செறிவு மிக்க போராட்டங்களை முன்னின்று நடத்திய மருத்துவர் லட்சுமி நரசிம்மன் (50) மார டைப்பால் வெள்ளியன்று (பிப்.7) உயிரிழந்தார்.  சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே குஞ்சாண்டியூர் பகுதியை  சேர்ந்தவர் மருத்துவர் லட்சுமி நர சிம்மன். இவருக்கு  3 மகன்கள்  உள்ளனர். மருத்துவர் லட்சுமி நர சிம்மன்  சேலம் அரசு மருத்துவ மனையில் பணிபுரிந்து வந்த நிலை யில் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று தருமபுரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறை பேராசி ரியராக பணியாற்றினார். 

இந்நிலையில் அரசு மருத்து வர்களின் கோரிக்கைகளான ஊதிய உயர்வு,  மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வருடம் தமிழகம் முழுவ தும் மருத்துவர்கள் சங்கம் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடு பட்ட தமிழ்நாடு அரசு மருத்து வர் மற்றும் பட்ட மேற்படிப்பு மாநி லத் தலைவர் லட்சுமி நரசிம்மன் உட்பட  119 பேர் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.   அப்போது லட்சுமி நர சிம்மன் ராமநாதபுரம் மாவட்டத்  திற்கு பணியிட மாற்றம் செய் யப்பட்டார். இதனைத்தொடர்ந்து  பணி இடமாற்றம் செய்யப்பட்ட பின் பதினொரு நாட்கள்  ராம நாதபுரத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், மீண்டும் தருமபுரி திரும்பினார்.  ஏற்கனவே பணி புரிந்த இடத்திற்கே பணி மாற்றம்  செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலை யில், ராமநாதபுரம் மருத்துவ மனைக்கு செல்லாமல்  சொந்த ஊரில்  இருந்து வந்தார். 

இந்நிலையில், லட்சுமி நர சிம்மன்  திடீரென இதய வலி  ஏற்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மருத்துவ சங்கத் தலைவர் மாரடைப்பால் காலமானார் என்பதை அறிந்த அரசு மருத்துவர்கள் மருத்துவ சங்க தலைவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  இதுகுறித்து லட்சுமி நர சிம்மன் மனைவி அனுராதா கூறும்போது, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கான தொடர் போராட்டங்கள், உண்ணாவிரதம் என நடத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படாததால் மன உளைச்சலில் தள்ளப்பட்டு என் கணவர் உயிரி ழந்துள்ளார். இதுவரை மன உளைச்சலால் 11 மருத்துவர்கள் இறந்துவிட்டதாகவும், என் கண வரின் இறப்பே கடைசி இறப்பாக  இருக்க வேண்டும் என்றும், இதன்  பிறகாவது தமிழக அரசு நடவ டிக்கை எடுத்து மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என உருக்கமுடன் தெரிவித்தார்.  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை முன்நின்று நடத்தியவர் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த மருத்து வர்களையும் ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கி தமி ழக அரசுக்கு எதிராக போராடி யவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎம் அஞ்சலி

 மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் உடலுக்கு சிபிஎம் சேலம் மாவட்டச் செயலாளர் பி. ராமமூர்த்தி, தருமபுரி மாவட்டச் செயலாளர் ஏ.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லி  பாபு, சேலம் மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் எம். சேதுமாத வன், எம். குணசேகரன், சிபிஎம்  வடசென்னை மாவட்ட செயற்  குழு உறுப்பினர் என். ராம கிருஷ்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சேலம் உருக்காலை சங்க செய லாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட திரளானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, மருத்துவர் என். காசி உள்ளிட்ட ஏராளமான  மருத்துவர்களும் அஞ்சலி செலுத்தினர். சனிக்கிழமை(பிப்.8) மாலை 5 மணிக்கு மேட்டூரிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், மயானத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் இரங்  கல் உரையாற்றியதும் மருத்துவர்  லட்சுமி நரசிம்மனின் உடல் அடக் கம் செய்யப்பட்டது.