tamilnadu

img

ரஜினிகாந்துக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு

சென்னை, ஜன. 22- கடந்த 14- ஆம் தேதி சென்னை யில் நடந்த துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசிய பேச்சுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.  ரஜினியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரஜினிக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி உள்ளிட்டோரும் ரஜினி  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். அதிமுக, திமுக தலைவர்கள் கூறுகையில், “ரஜினி யோசித்து பேசி  இருக்க வேண்டும்” என்றனர். 

இந்த நிலையில், சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வத்திடம் ரஜினியின் கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர், “தந்தை பெரியார்,  கீழ்த்தட்டு ஏழை-எளிய மக்க ளுக்காகவும் உரிமைகள் மறுக்கப்  பட்ட மக்களுக்காகவும் பாடுபட் டார். பகுத்தறிவு பகலவனாக விளங்கி னார். என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மிக உயர்ந்த, உன்  னத நிலைக்கு வருவதற்கு அடித் தளம் இட்டவர் தந்தை பெரியார். அவர் அந்த செயலில் ஈடு படும்போது பல்வேறு விமர்சனங் கள் வந்தது. அந்த விமர்சனங்கள் எல்லாம் பொய்யாக உண்மைக்கு மாறாக போய் விட்டன. தந்தை பெரி யார் சொன்ன கருத்துக்கள் தான் இன்று கோபுரத்தின் உச்சியில் நீடித்து நிலை கொண்டுள்ளது. அதை யாராலும் எந்த நேரத்திலும் குறை சொல்ல முடியாது. குறை  சொல்பவர்கள் மீண்டும் பெரியாரு டைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அவர் இந்த சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முன் முயற்சிகளை எல் லாம் தீவிரமாக நன்றாக படித்து ஆராய்ந்து கருத்து சொல்ல வேண்  டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.