tamilnadu

காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பதக்கம்

சென்னை,ஜன.14- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் 3 ஆயிரத்து 186 பேருக்கு பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல் துறையில் காவலர் நிலை ஒன்று, தலைமைக் காவலர், ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் உள்ள 3000 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தீயணைப்புத்துறையை சேர்ந்த 120 பேருக்கும் சிறை வார்டர்கள் 60 பேருக்கும் பொங்கல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் வானொலி பிரிவு, நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் 6 பேருக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.