tamilnadu

img

ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய காதல் தம்பதி

கோவை , ஏப்.26- கொரோனா நோய் பரவல் தடுப்பு ஊரடங்கால் திருமணம் மற்றும் சில நிகழ்வுகளுக்கு குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்துகொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.  

இந்நிலையில் கோவை துடியலூர் அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த விக்னேஷ் பாபு மற்றும் பிரவினா ஆகியோர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். விக்னேஷ் பாபு சிவில் இன்ஜினீ யராகவும் - பிரவினா ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்கள்.  பெற்றோர் சம்மதத்துடன் வெகு குறைந்த அளவிலான உறவினர்களுடன் நடைபெற்ற இந்த திருமணத்தை பேஸ்புக்கில் லைவ் செய்தும் யூ டியூப்பில் அப்லோடு செய்தும் உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளனர்.

திருமணத்திற்கு தயார் செய்யப்பட்ட உணவுகளை காவல்துறையினர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு  குருடம்பாளையம் முன்னாள் தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் காதல் தம்பதியர் வழங்கினர். திருமணத்திற்கு தயார் செய்யப்பட்ட காலை உணவை கோவை வடமதுரை அருகே பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் மணக்கோலத்திலேயே சென்று வழங்கினர்.