tamilnadu

img

உள்ளாட்சி தேர்தல் பணி: உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்

சென்னை,நவ.2- தேர்தல் பணியில் ஆசிரியர் களை ஈடுபடுத்தப்படுவது வழக் கம். தேர்தலுக்காக பயிற்சி வகுப்பு கள், செயல்முறை விளக்கம், ஓட்டுப்பதிவு, வாக்கு எண் ணிக்கையில் எவ்வாறு ஆசிரி யர்கள் பணியாற்ற வேண்டும் என்  பது குறித்து விளக்கம் அளிக்கப் படும். தற்போது உள்ளாட்சி தேர்த லில் உதவி தேர்தல் அதிகாரி யாக ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர்கள் நியமித்து வரு கிறார்கள். இதற்கு தமிழ்நாடு  ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து சங்க  மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்  கையில் கூறியிருப்பதாவது:- வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உள்ளிட்ட வாக்குச் சாவடி அலுவலர்களாக ஆசிரி யர்கள் கடந்த தேர்தல் வரை பணி யாற்றி வந்தோம். அது கற்பித்தல்  பணி பாதிக்காத அளவிற்கு நடந்தது.

தற்போது விரைவில் அறி விக்கப்பட உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக பணி யமர்த்தப்படுவதால் தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து குறிப்  பாக வேட்புமனு பெறுவதி லிருந்து தேர்தல் நடந்து முடிவுகள்  அறிவிக்கப்படும் வரை குறைந்த பட்சம் 15 நாட்களிலிருந்து அதிக பட்சம் ஒரு மாதம் வரை நீடிக்கும்.  உதவி தேர்தல் அதிகாரி பணி  அலுவலகங்களில் பணிபுரிபவர்க ளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏற்கனவே வாக்கா ளர் சரிபார்ப்பு பணி பி.எல்.ஒ., டி.எல்.ஒ. போன்ற பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசி ரியர் வீதம் வருடம் முழுவதும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக உதவி தேர்தல் அதிகாரி பணி வழங்குவதால் கற்பித்தல் பணி பெரிதும் பாதிப்பு  ஏற்படும். ஏற்கனவே பல்வேறு பணிகளுக்கிடையில் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. புதிய பாடத்திட்டம், அதிக பாடம், பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வ தற்கு போதிய கால அவகாச மின்றி சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.