tamilnadu

img

சட்டம்-ஒழுங்கு: முதல்வரின் பொறுப்பற்ற பேட்டிக்கு சிபிஐ கண்டனம்

சென்னை, ஜூலை 25- சட்டம்- ஒழுங்கு குறித்து தமிழக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்ததற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நெல்லையில் தி.மு.க. முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கர், பணிப்பெண் மாரி ஆகிய மூவரும் படு கொலை செய்யப்பட்டு, வீட்டில் உள்ள நகை  மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. சேலம் நங்கவள்ளியில், இந்தியக்  கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்  ஜீவானந்தம் சகோதரர் வேலு தங்கமணி மீது  கொலைவெறி தாக்குதல் நடைபெற்று உள்ளது. ஆணவ படுகொலைகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டி ஒவ்வொருவரின் உயிருக்கும் பாதுகாப்பு அளித்திட வேண்டிய பொறுப் பும், கடமையும் அரசுக்கு உண்டு. ஆனால் முதல்-அமைச்சர் முந்தைய ஆட்சி யிலும் நடைபெற்றது, தற்போதும் நடை பெற்று வருகின்றது என்று கூறுவது, அவர்  வகிக்கும் உயரிய பொறுப்புக்கு உகந்ததா?  எனவே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பையும், அச்சமின்றி மக்கள்  வாழ்வதற்கும் உரிய நடவடிக்கை மேற் கொள்ள அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.