சென்னை,டிச.12- தமிழகத்தில் கடலூர், நாகை உள்பட ஐந்து மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட பாதி இடங்களில் அதிகமாக சில இடங்களில் குறை வாகவும் பெய்திருக்கிறது.ஆனால் ஒட்டுமொத்த அளவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்தமுறை வழக்கமாக பெய்திருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த இருவாரங்கள் வெளுத்துக்கட்டிய நிலையில் தற்போது பெரும்பாலான இடங்க ளில் வறண்ட வானிலையே காணப் படுகிறது. தமிழத்தை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி களில் மட்டும் கடந்த சில நாட்க ளாக லேசான மழை பெய்து வரு கிறது. நெல்லை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. 2 நாட்கள் தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், புதுக்கோட்டை மற்றும் கட லூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு ஒரு சில இடங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்ப தாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள் ளது.