சென்னை, செப்.15- தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்ப தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனத்தாலும் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்கள் பரவலாக மழை பெய்யக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருது நகர், கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்க ளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.