தஞ்சாவூர், ஏப்.29- தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லாரன்ஸ் சேவியர்.இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவர்களது மகன் கேப்ரிக் ( வயது 5 ) இதே கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். மாணவன் கேப்ரிக், தனது உண்டியல் சேமிப்பு பணத்தில் இருந்த ஆயிரத்து 125 ரூபாயை தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வங்கிக்கணக்கில், தனது தந்தையின் உதவியுடன் செலுத்தியுள்ளார். மாணவன் கேப்ரிக்கிற்கு, புனல்வாசல் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.