தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பட்டதாரி ஆசிரியர்கள் ரூ.32லட்சம் வழங்கியுள்ளனர். இதற்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், தலைவர் எஸ்.பக்தவச்சலம், பொருளாளர் சி.ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர்.