கொடைக்கானல்,ஆக.10- கொடைக்கானல் மலைப்பூண்டுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இந்தப் பூண்டு, மருத்துவ குணம் மிக்கது. காரம், உறுதித் தன்மையில் மற்ற பூண்டுகளை விடச் சிறப்பானது. தனித்தன்மை வாய்ந்தது. பத்து மாதங்கள்வரை பூண்டு பல் பிரியாமல் சேமித்து வைக்க முடியும். பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பிறகு தற்போதுதான் புவிசார் குறியீடு சிறப்பு கிடைத்துள்ளது.