ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உணவின்றி தவித்த சுமார் 250 வெளி மாநில தொழிலாளர்களின் பட்டியலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேகரித்து வருவாய் துறையினரிடம் அளித்தனர்.
மூக்கண்டப்பள்ளி, ஜுஜுவாடி போன்ற பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் அவர்களது ஆதார், செல்போன் எண், பணியாற்றும் இடம், தங்கியிருக்கும் இடம், சொந்த ஊர் போன்ற விவரங்கள் அந்த பட்டியில் சேகரிக்கப்பட்டன. மேலும் சுமார் 200 பேர் இதுபோல் உள்ளனர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க கோட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய தொழில் அதிபர்களின் பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஓசூர் மாநகராட்சி ஆணையர் உடனடியாக அவர்களுக்கு அம்மா உணவகத்தில் தயாரான உணவை வழங்க ஏற்பாடு செய்தார். வாலிபர் சங்கத்தினர் அதை வெளிமாநில தொழிலாளர்களின் வசிப்பிடங்களுக்கு கொண்டு சென்று வழங்கினர்.