விருதுநகர், ஜூலை 17- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தை யொட்டி வரும் 24-ஆம் தேதி ஆண்டாள் கோவிலில் தங்க தேர் இழுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்திற்குள்ளேயே தங்கத் தேரை இழுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. பக்தர்களின்றி ஒன்பது நாட்கள் திருவிழாவை அர்ச்சகர் மட்டும் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார் சர்வ அலங்கா ரத்துடன் காட்சி அளித்தனர். கொடியை அர்ச்சகர் வாசுதேவன் ஏற்றினார். கோவில் தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்ட னர்.