இஸ்லாமியர்கள் குடியுரிமை அற்றவர்களாக வாழ வேண்டும் என்று கோல்வால்கர் கூறியதைத்தான் இன்றைக்கு பாஜக இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து அமல்படுத்துகிறது. அதிமுக சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் அது தோற்றிருக்கும். மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கைச் செய்துள்ளனர். கூட்டணி தர்மத்திற்காக வாக்களித்ததாக கூறுகிறார்கள். கூட்டணி தர்மம் என்பது ஒருவழிப்பாதையா? இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அதிமுக, பாமக தங்களது முகத்திரையை கிழித்துக் கொண்டுள்ளனர்.