tamilnadu

img

அகவிலைப்படி நிறுத்தி வைப்பு: கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் கண்டனம்

சென்னை, ஏப்.28- அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்திய மாநில அரசின் முடிவிற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழி யர் சம்மேளனம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ. கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டி ருக்கும் அறிக்கை வரு மாறு:-

 அகவிலைப்படி உயர்வு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அதனை ஈடுகட்டுவதற்காக வழங்கப்படக் கூடிய ஒரு தொகை தான். ஆனால் கொரோனா நிவாரண நிதி தேவையை மத்திய அரசி டம் போராடி பெறுவ தற்கு மாறாக அரசு ஊழியர்களின் அகவிலைப் படியை நிறுத்தி வைப்பதும், ஆண்டுதோறும் பெறக்கூடிய ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை நிறுத்தி வைப்பது ஏற்புடை யதல்ல.

தமிழக அரசு உடனே மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏற்கனவே ஜன வரி மாதம் முதல் அறிவிக்க வேண்டிய  அகவிலைப்ப டியை உடனடியாக அறி வித்து விடுவிப்பது, தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கு ஏற்ற அகவிலைப் படியை அறிவித்து வழங்க வேண்டும் என கோருகின்றோம்.  

அதேபோன்று ஊழி யர்களின் செலவினங்களை ஈடு கட்டும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தினை விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரி வித்திருக்கிறார்.