tamilnadu

img

கல்லூரி மாணவி கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 24- புதுக்கோட்டை அடுத்த இடையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி, பக்கத்து ஊரான  தோப்புக்கொல்லையைச் சேர்ந்த விவேக் இருவரும் காதலித்துள்ளனர். காதலுக்கு பெண் ணின் வீட்டில் எதிர்ப்புத் தெரிவிக்வே இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடந்த 07.06.2020 அன்று கோயம்புத்தூருக்கு காரில் சென்றுள்ளனர். வழியில் கரூர் மாவட் டம் குளித்தலை சோதனைச் சாவடியில் இவர் களை விசாரித்த போலீசார் சாவித்திரியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். தன்னை பெற்றோரிடம் ஒப்படைத்தால் தன்னை கொலை செய்து விடுவார்கள் என கெஞ்சி யும் காவல்துறையினர் அதைப் பொருட் படுத்தவில்லை.

 இந்நிலையில் கடந்த 11.06.2020 அன்று சாவித்திரி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி போலீசாருக்குத் தெரிவிக்காமலேயே உட லை உறவினர்கள் எரித்துள்ளனர். இதனை யடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கத்தி னர் தலையிட்டு சாவித்திரியின் பெற்றோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தவறு செய்த குளித்தலை மகளிர் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகி யோரிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தினர். ஆனால், காவல்துறையோ தற்கொலைக்குத் தூண்டியதாக மட்:டும் வழக்குப் பதிவு செய்துள் ளது. 

எனவே, குற்றவாளிகளுக்கு உடந்தையாக உள்ள காவல்துறையைக் கண்டித்தும், வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றக் கோரியும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாதர் சங்கம், வாலிபர் சங்கம், இந்திய மாண வர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், தலை வர் த.செல்லக்கண்ணு, ஜனநாயக மாதர் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். 

தீ.ஓ.மு. மாவட்டச் செயலாளர் சி.அன்பு மணவாளன், மாநிலக்குழு உறுப்பினர் சி.ஜீவானந்தம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா,  செயலாளர் துரை.நாராயணன், துணைச் செயலாளர் இளையராஜா, மாணவர் சங்க மாவட்டச் செயலளர் எஸ்.ஜனார்த்தனன், மாநிலக்குழு உறுப்பின் ஏ.எஸ்.ஓவியா, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே.முகமதலிஜின்னா, துணைத் தலை வர் எம்.ஜியாவுதீன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சண்முகம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் எல்.வடிவேல், எம்.ஆர். சுப்பையா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.