இந்துக்களுக்கு எதிராக இந்து மதவெறி அமைப்புகள்: தலைவர்கள் சாடல்
சென்னை, மார்ச் 14- அரசாணை 318ன்படி கோவில் நிலங்களில் வசிப்போருக்கு குடி மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி சனிக்கிழமையன்று (மார்ச் 14) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில் நிலங்களில் குடி யிருப்போருக்கு குடிமனைப்பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை 318ஐ வெளியிட்டது. இதற்கு எதி ராக இந்து மதவெறி அமைப்புகளின் தலைவர்கள் செயல்படுகின்றனர். அரசாணைக்கு தடை கோரி நீதி மன்றத்தில் வழக்கும் தொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்துக்களுக்கு எதிராக செயல்படும் இந்து மத வெறி அமைப்புகளின் தலைவர் களை கண்டித்தும், அரசாணைப் படி பட்டா கேட்டும் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கத்தின் சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நியாயமான விலையில் கிரயம்
போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சாமி.நடரா ஜன், “அறநிலையத்துறையின் கீழ் உள்ள 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றிற்கு சொந்தமாக 4 லட்சத்து 78ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களில் வசிப்போருக்கும், குத்தகைதாரர்களாக உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயி களுக்கும் நிலத்தை சொந்தமாக்க கோரி வருகிறோம். நீண்டகால போராட்டத்திற்கு பிறகு கோவில் நிலத்தில் 5 ஆண்டு களுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க அரசாணை 318 வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றோர் பெரும்பான்மையான இந்துக்க ளுக்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மதவாத சக்தி களுக்கு அஞ்சாமல் அரசாணை 318ஐ செயல்படுத்த வேண்டும், நீண்டகாலமாக நிலத்தை பயன்ப டுத்துவோரிடம் நியாயமான விலையை பெற்றுக் கொண்டு கிர யம் செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.
பட்டா இன்றி 75 லட்சம் குடும்பங்கள்
இந்தப் போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ. சண்முகம், “பல வழக்குகளில் அர சின் கொள்கை முடிவுகளில் நீதி மன்றம் தலையிடாது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மக்களுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள அரசின் கொள்கை முடிவின் மீது ஒரு வருடமாக நீதிமன்றம் வழக்கை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். தமிழகம் முழுவதும் 25 லட்சம் குடும்பங்கள் பட்டா இன்றி அரசு நிலத்திலும், 50 லட்சம் குடும்பங்கள் கோவில் நிலத்திலும் வசிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடி மனைப் பட்டா வழங்குவது அர சின் கொள்கை முடிவு என்று நீதி மன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
50 லட்சம் குடும்பங்களில் 20 ஆயி ரம் குடும்பத்திற்குதான் பட்டா வழங்க உள்ளனர். அறநிலையத் துறையிடம் இருந்து சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு விலை கொடுத்து 600 ஏக்கர் நிலத்தை வாங்கி அரசு 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க உள்ளது. தமிழக அரசு மீதமுள்ள குடும்பங்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோட்டைக்கு செல்வோம்: பட்டாவோடு திரும்புவோம்
கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்க, கோவில்களை மதக்கலவரம் தூண்டும் மையங்க ளாக மாற்ற மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன. எனவேதான், அற நிலையத்துறையே வெளியேறு, இந்துக்களிடம் கோவிலை ஒப்படை என்று கோரி வருகின்றன. ஆதிகாலம் முதல் அரசின் கட்டுப் பாட்டில்தான் கோவில்கள் இருந்து வருகின்றன. எனவே, அறநிலை யத் துறை கட்டுப்பாட்டில்தான் கோவில்கள் இருக்க வேண்டும். மதவெறி சக்திகளுக்கு அஞ்சாமல் அரசு செயல்பட வேண்டும். அர சாணை 318ன்படி பட்டா வழங்கா விடில், “கோட்டைக்கு செல்வோம்; பட்டாவோடு திரும்புவோம்” என்ற வகையில் போராட்டம் நடை பெறும் என்று எச்சரித்தார்.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், சங்க ஆலோசகர் நெ.இல. சீதரன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆர். ஜெயராமன், மாநி லக்குழு உறுப்பினர்கள் வ.செல் வம், எம். நடராஜன், குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர்கள் கு. லோகநாதன் (சூளை), ஜோதி (திரு வொற்றியூர்), ஆர். குபேந்திரன், சி. ரவிகிருஷ்ணா (போரூர்) உள்ளிட்ட பலர் பேசினர்.