சிதம்பரம், ஏப்.15- கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகாசன்(55), மாய கிருஷ்ணன் (50), எழில் வாணன் (35), ரவி (38) ஆகிய நான்கு பேரும் குள்ளஞ்சாவடி பகுதியில் விற்பனை செய்த மெத்தனால் கலந்த சாரயத்தை குடித்துள்ளனர். சாரயம் குடித்த சிறிது நேரத்தில் சந்திரகாசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் அதே இடத்தில் மயங்கி விழுந்து பலியானார். மேலும், மாயகிருஷ்ணன், எழில்வாணன், ரவி ஆகிய மூவரும் சுருண்டு விழுந்தனர். அருகில் இருந்த வர்கள் மூவரையும் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். இதில் எழில்வாணன். மாயகிருஷ் ணன் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்து ரவி மட்டும் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறபடுகிறது.
இந்நிலையில், புதுச்சத்திரம் அருகே உள்ள ஆணையம் பேட்டை கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரும் கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலை யில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜன் இருவரும் ஏப்ரல் 15 புதன்கிழமை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த னர். இதனால், சாராயம் குடித்து இறந்த வரின் எண்ணிக்கை 3 ஆக அதிக ரித்துள்ளதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.