tamilnadu

img

கொரோனா பாதிப்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்து திரும்பினர்

சென்னை, ஏப். 17- சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோ க்கு மருத்துவமனையில் கொரோனா தொ ற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் பூரணமாக குணமடைந்து வெள்ளியன்று (ஏப். 17) வீடு திரும்பினர். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா நோயினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதேபோல் தமிழகத்தில் வியாழக்கி ழமை வரை 180 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இருந்தனர். இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயினால் பாதிப்படைந்து குணமடைந்த 30 பேரை மருத்துவர்கள் வாழ்த்தி கை தட்டி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர்களுக்கு வீட்டில் எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும், எந்தவகை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும் அவர்களுக்கு சத்தான உணவு ஆகார ங்கள் அடங்கிய ஒரு தொகுப்பும் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் கூறும்போது, எங்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் முறையாக, எந்த சிரமமுமின்றி சிகிச்சை அளித்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் மருத்துவர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்வோம் என்றார்.

பின்னர் இதுகுறித்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் நாராயணபாபு கூறுகையில், இந்த மருத்துவமனையில் 95 பேர் நோயினால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 30 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர். இவர்கள் அனைவரிடமும் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

 14 நாட்களுக்கு பிறகு அவர்கள் விருப்பப்பட்டால் தாங்களாகவே முன்வந்து ரத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் ரத்தம் வழங்கினால் அதில் இருந்து எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பிளாஸ்மா மூலம் மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ய உள்ளோம் என்றார்.