tamilnadu

img

கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை,ஏப்.16- தமிழக அரசு மேற் கொண்டு வரும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது என்றும் வியாழனன்று மேலும் 25 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளதை அடுத்து பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 1,267 பேராக அதிகரித்துள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப் படுத்த தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி வழியாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர் களுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோ சனை நடத்தினார். மாவட்டங்களில் எடுக்கப் பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். 

இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ கத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவும் தீவிரம் குறைந்துள்ளது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். மத்திய அரசு கூறுவதற்கு முன்ன தாகவே தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது. 3 முறை மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்பட் டுள்ளது. அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். நோய் தடுப்பு பணிகளுக்காக 19 மருத்துவர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 

அனைத்து மாவட்டங்களுக்கும் பிசிஆர் கருவிகள் 

தமிழகத்தில் கொரோனாவை தடுப்ப தற்கான அனைத்து மருத்துவ உபகரணங்க ளும் தமிழகத்தில் போதிய அளவில் உள்ளன. நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கும் பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. முகக்கவசங்கள் தேவையான அளவு கையிருப்பு உள்ளது. இந்தியாவி லேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது. 

அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. பரிசோதனைக்கான 68 ஆயிரம் பிசிஆர் கருவிகள் உள்ளன. அரசு சார்பாக 17 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 10 பரிசோதனை மையங்கள் என மொத்தம் 27 பரிசோதனை மையங்கள் உள்ளன. 

அனைத்து மாவட்டங்களுக்கும் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட் டுள்ளது. நோய்த்தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு தேவையான பரிசோதனை கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 25 பேருக்கு கொரோனா 

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதை அடுத்து நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,267 பேராக அதிகரித்துள்ளது. குணமடைந்த தோரின் எண்ணிக்கை 180 பேராக உயர்ந் துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14-இல் இருந்து 15 பேராக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் கொரோனா பாதிப்பு படிப்படி யாக குறைந்து விடும். ஏழைக ளுக்கு எந்த நோயும் இல்லை. வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோ னாவை இறக்குமதி செய்துள்ளனர். 

ஆதரவற்ற 54 ஆயிரத்திற்கும் அதிகமா னோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப் பட்டுள்ளது. காற்கறிகளை நடமாடும் காய்கறி கடைகள் மூலம் வீட்டிற்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாள்தோறும் 4500 வாகனங்கள் மூலம் 2500 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. விவசாயி களின் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் 138 குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள் இலவச மாக பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தியா வசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியா வசிய பொருட்களின் விலையேற்றம் அரசின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட் டுள்ளது. உணவுப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்க ளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கி வருகிறோம். ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

சிவப்பு பகுதியில் ஊரடங்கு தொடரும்

சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித் துள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிக்குள் வரும். தமிழகத்தில் நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் . 

ரம்ஜான் நோன்பு காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஆலோசிக்க உள்ளது. தமிழக தலைமை காஜியுடன், தலைமைச் செயலாளர் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்த உள்ளார். ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். மாநிலத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 134.64 கோடி வந்துள்ளது. நிதி வழங்கிய அனைவருக்கும் அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.